சமூக வலைத்தளங்களில் பரவிய போலிச் செய்தி ; பளை வனப்பகுதி குறித்து அரசு விளக்கம்

Tamils Kilinochchi Court of Appeal of Sri Lanka Social Media Nalinda Jayatissa
By Sahana Aug 18, 2026 10:42 PM GMT
Report

கிளிநொச்சி மாவட்டம் பளை வனப்பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பகுதியொன்றை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் பரவிய போலிச் செய்தி ; பளை வனப்பகுதி குறித்து அரசு விளக்கம் | Government Explains About Palai Forest Area Fake

குறித்த பகுதி 1919ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 7064ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 2025ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக காடழிப்பு இடம்பெற்று வருவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

தியாகராஜா குணதீபன் என்பவர் ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பையும் பின்னர் 20 ஏக்கர் நிலப்பரப்பையும் ஆக்கிரமித்து, கற்றாழை மற்றும் காய்கறிச் செய்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் அப்பகுதியில் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று, தற்போது நான்கு மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த கட்டடத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தி உள்ளூர் மக்களை இணைத்து ஆடைத் தொழிற்சாலை ஒன்றும் நடத்தப்பட்டு வந்ததாகவும், அந்த நிறுவனம் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வனவள திணைக்களம் மற்றும் பொலிஸாரால் குறித்த பகுதியில் பலமுறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நில ஆக்கிரமிப்பு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் குறித்த சந்தேகநபர் அந்தக் காணிக்குள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது. பின்னர், அந்தத் தடையை நீக்குமாறு பெப்ரவரி 17ஆம் திகதி அவர் முன்வைத்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நீதிமன்றத் தடையை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் அகழ்ந்தெடுக்கப்பட்ட மணலை எடுத்துச் சென்றதாகவும் குறித்த நபருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஜூலை 24ஆம் திகதி வனவள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தியாகராஜா குணதீபன் உள்ளிட்ட ஒன்பது பேர் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த காணி தமக்குச் சொந்தமானது எனக் கூறி சம்பந்தப்பட்ட நபர் சில ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள நிலையில், அவை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்னணியிலேயே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் ஆடைத் தொழிற்சாலை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அங்கு புலிகளின் பயிற்சி முகாம் இயங்கியதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் போலிச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஆலயத்திற்குள் சொகுசு வாகனம் ; எழுந்துள்ள கடும் சர்ச்சை

நல்லூர் ஆலயத்திற்குள் சொகுசு வாகனம் ; எழுந்துள்ள கடும் சர்ச்சை

கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Paris, France, Tergnier, France, England, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US