திருகோணமலைக்கு சஜித் திடீர் விஜயம்; கோணேசரையும் வழிபட்டார்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், வரலாற்று சிறப்புமிக்க கோணேஸ்வரம் ஆலயத்திற்கு இன்று காலை சென்றதுடன் அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
இதன்போது கேணேச்சர ஆலயத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களையும் சஜித் பெற்றுக் கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில் அமைந்த" பிரபஞ்சம் "நிகழ்ச்சித்திட்டம் திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி இடம் பெற்று வருகின்றது.
சஜித்தின் இந்த விஜயத்தில் , ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் சஜித் பிரேமதாச , திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.


