நாடாளுமன்ற பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்த மோச சம்பவம்
நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு பிரதியமைச்சர் ஒருவர் மோசமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண் ஊடகவியலாளர் கட்சியின் உயர் மட்டத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து கட்சி உயர் பீடம்,பிரதியமைச்சரிடம் விளக்கம் கோரியுள்ளது. மேலும் உயர்பீடம் அவருக்கு காரசாரமாக பேசியதாகவும் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் கீழ் தளத்திலுள்ள நூலகத்திற்கு அருகில் சமிந்திராணி கிரியெல்ல எம்.பி,சத்துர கலபத்தி எம்.பி,பெண் ஊடகவியலாளர் மூவரும் பேசி கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த பிரதியமைச்சர் பெண் ஊடகவியலாளரை பார்த்து அவரின் உடல் அமைப்பு தொடர்பில் மோசமாக பேசிய சந்தர்ப்பத்தில் சந்திராணி கிரியெல்ல எம்.பி அவ்வாறு பேச வேண்டாம் என தடுத்துள்ளார்.
இதன்கோது ஊடகவியலாளரும் ஏதோ பேசியதையடுத்து அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் குறித்த ஊடகவியலாளர் கட்சியின் உயர் பீடத்தை தொடர்பு கொண்டு இது பற்றி அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் பிரதியமைச்சர், ஊடகவியலாளருக்கு தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பு எடுத்துள்ள நிலையில், அவர் பதிலளிக்கவில்லை என கூறப்படுகின்றது.
இந்த ஊடகவியலாளர் கடந்த காலங்களின் ஜே.வி.பி கட்சியுடன் நெருங்கி பணியாற்றியுள்ளமையும் தெரியவந்துள்ளது.