நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து பிக்குகள் போராட்டம்!
ருவான்வெலி மகா சேயா மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி ஆகிய புனித இடங்களை உள்ளடக்கிய பகுதியிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், இன்று (09) மூன்றாவது நாளாகத் தொடர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாலங்கொட கஸ்ஸப தேரர் தலைமையிலான பிக்குகள் மற்றும் பொது மக்கள் , கடந்த 07ஆம் திகதி காலை அனுராதபுரத்தில் உள்ள ருவான்வெலி மகா சேயாவுக்கு அருகிலுள்ள தானம் வழங்கும் வளாகத்தில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் ஆரம்பித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு தற்காலிகக் குடிசை ஒன்றை அமைக்க முயன்றபோது, பொலிசர் அதனை தடுத்ததால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் இது குறித்து அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, ருவான்வெலி மகா சேயா மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி ஆகியவற்றைச் சுற்றியுள்ள புனிதப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், பிக்குகளும் ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
இதற்கிடையில், பாலங்கொட கஸ்ஸப தேரரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று இரவு (08) அந்த இடத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.