உக்ரைன் மீது தொடர்ந்து அதி நவீன ஏவுகணைகளை பயன்படுத்தும் ரஷ்யா! பகீர் தகவல்
உக்ரைன் மீது ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து 28 வது நாளாக தாக்குதலை தொடுத்து வருகின்றன. இதேவேளை உக்ரைன் வடமேற்கு புறநகர்ப் பகுதிகளான ஹோஸ்டோமெல் மற்றும் இர்பின் ஆகியவற்றை ரஷ்ய துருப்புகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாக ரஷ்ய துருப்புகள் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பால் உக்ரைன் மக்கள் 30 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
உக்ரைன் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், 10,000 ஆயிரம் ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால சிறப்பு அமர்வு கூட்டம் இன்று புதன்கிழமை ( 23-03-2022) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.