பிரபல வெளிநாட்டுக்கு தப்பி ஒடும் ரஷ்ய கோடீஸ்வரர்கள்
உக்ரைனில் ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள போரினால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவந்துள்ள பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பணக்கார ரஷ்யர்களுக்கு டுபாய் ஒரு புகலிடமாக உருவெடுத்துள்ளது.
ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் தொழில்முனைவோர் முன்னெப்போது இல்லாத வகையில், அதிக எண்ணிக்கையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வந்துள்ளனர் என்று வணிகத் தலைவர்கள் சர்வதேச ஊடகத்திடம் தெரிவித்தனர்.
2022-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ரஷ்ய மக்களுக்கு டுபாயில் சொத்து வாங்குதல் 67% அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை. அதே நேரத்தில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பையும் விமர்சிக்கவில்லை.
கடந்த 2 மாதங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஒரு ரஷ்ய பொருளாதார நிபுணர் கூறுகையில்,
போர் தொடங்கிய முதல் 10 நாட்களில் 2 இலட்சம் ரஷ்யர்கள் வெளியேறிவிட்டனர்.
டுபாயில் செயல்பட நிறுவனங்களுக்கு உதவும் Virtuzone, ரஷ்ய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது.
பொருளாதார சரிவு குறித்து ரஷ்யர்கள் கவலைப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் தங்கள் செல்வத்தைப் பாதுகாக்க டுபாய்க்கு செல்கின்றார்கள்.