குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா கொடூர தாக்குதல்! யுக்ரைன் ஜனாதிபதி கவலை
மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதலில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், யுக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் தாக்குதலை கொடூர நடத்தி வருகிறது.
இந்நிலையில், யுக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின என யுக்ரைன் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறுகையில்,
மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறினார்.
மேலும் இடிபாடுகளுக்குள் குழந்தைகள், மக்கள் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகள் வழியாகச் செல்கின்றதாகவும் இது மிகவும் கொடுமை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

