ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டவர்களுக்கு தடை விதித்த பிரபல நாடு!
நவம்பர் மாதம் முதல் வெளிநாட்டு பிரஜைகள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் கோவிட் தடுப்பூசியைப் பெற்றவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷ்ய உற்பத்தியாகிய ஸ்புட்னிக், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாதிருப்பதே இதற்கான காரணம் என்றும் அமெரிக்க சுட்டிக்காட்டியுள்ளது.
மற்ற கோவிட் தடுப்பூசிகளான , எஸ்ட்ரா செனிகா, மொடர்னா, பைஸர் மற்றும் சைனோபார்ம் உள்ளிட்ட தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் இதுவரை 160000 ஆயிரம் பேர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியைப் பெற்றிருப்பதால் அவர்களுக்கும் அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.