ரஷ்யாவின் கடும் தாக்குதல்! உக்ரைன் தகவல் தொடர்பு சேவைக்கு ஏற்பட்ட நிலை
உக்ரைன், ரஷ்யா இடையிலான 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை துருக்கியில் நாளை செவ்வாய்கிழமை (29-03-2022) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் தாக்குதலை நடத்தி வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிக்கி சீர்குலைந்துள்ளன.
இந்த நிலையில், ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக, உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான யுகேஆர் டெலிகாம் கடும் செயலிழப்பைச் சந்தித்துள்ளது.
இது தொடர்பாக கீவ் நகர அரசு அதிகாரிகள் கூறுகையில்,
உக்ரைனில் தகவல் தொடர்பு சேவை கடுமையாக செயலிழந்துள்ளது. இதற்கு சைபர் தாக்குதல் காரணமா என விசாரித்து வருகிறோம். நேற்று காலை தொடங்கிய மின்தடை மாலை வரை நீடித்தது என தெரிவித்தனர்.