ஐபிஎல் தொடரில் இளம் வயதில் வரலாற்று சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி - கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றி சென்றது.
2021 ஐ.பி.எல் சீசன் முழுவதும் சென்னை அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
அதனை விரிவாக பார்க்கலாம்...
ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை எடுப்பவர்களுக்கு ஆரஞ்ச் தொப்பி வழங்கப்படும். இந்த சீசனில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 16 போட்டிகளில் விளையாடி 635 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் ஒரு சதமும் நான்கு அரைசதங்களையும் விளாசியுள்ளார்.
முன்னதாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 626 ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் இருந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் 635 ஓட்டங்களை குவித்து தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதேவேளை ஐபிஎல் தொடர் வரலாற்றில் இளம் வயதில் ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையையும் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளது.