சுகாதாரத்துறைக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு ; மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர்

Batticaloa Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Court of Appeal of Sri Lanka Budget 2026
By Sahana Aug 16, 2026 04:14 PM GMT
Report

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி – ஓந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய விடுதி கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டை சரியான தலைமைத்துவத்துடன் முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

கல்முனை வைத்தியசாலை விவகாரம் குறித்து இரா.பிரபாகரன் குற்றச்சாட்டு

கல்முனை வைத்தியசாலை விவகாரம் குறித்து இரா.பிரபாகரன் குற்றச்சாட்டு

2026ஆம் ஆண்டுக்கான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வரவு–செலவுத் திட்டத்தில் சுமார் 600 மில்லியன் ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான தொகையைக் கொண்ட வரவு–செலவுத் திட்டத்தை முன்வைத்த இலங்கையின் முதலாவது பிரதேச சபையாக தமது சபை திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், குறித்த வரவு–செலவுத் திட்டத்தில் சுமார் 100 மில்லியன் ரூபாய் சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறைக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு ; மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் | Rs 100 Million Allocated For The Health Sector

இதேவேளை, ஓந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியை பாசிக்குடா போன்ற முக்கிய சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவதற்காக 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

ஓந்தாச்சிமடம் கடற்கரையை கிழக்கு மாகாணத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உருவாக்குவதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்தபோது, சுகாதாரத்துறையை மேம்படுத்துவதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அதிகளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாகவும் வினோராஜ் தெரிவித்தார்.

பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்புவதைத் தடுப்பதிலும் பிரதேச சபை முன்னுதாரணமாக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த மே மாதம் 12ஆம் திகதி பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சபையின் சுகாதார அதிகாரி ஊடாக களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாகவும், அதில் 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அணுக வேண்டும் எனவும் தவிசாளர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் தேவைகளை எந்த அரசாங்கம் சரியான முறையில் நிறைவேற்றுகின்றதோ, அந்த அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு தாம் ஆதரவளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டை சரியான தலைமைத்துவத்துடன் முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் கீழ், தமது பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கட்டமைப்புடன் செயற்படுவதே தமது நோக்கம் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மேலும் தெரிவித்தார்.

பிரபல அரசியல் முக்கியஸ்தருக்கு கோட்டாபயவினால் நேர்ந்த அவமானம்

பிரபல அரசியல் முக்கியஸ்தருக்கு கோட்டாபயவினால் நேர்ந்த அவமானம்

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US