முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம அதிரடி அறிவிப்பு

Sahana
Report this article
மாத்தறை பொல்ஹேன பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டம் தொடர்பாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹானாம அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை பொல்ஹேன சர்வதேச கிரிக்கெட் பயிற்சி பாடசாலை மற்றும் மைதானம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்றது.
அதன்போது, அதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரொஷான் மஹானாம, இத்திட்டம் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு, இவ்வாறான பெரிய திட்டங்களின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் மற்றும் எண்ணங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
தற்போதைய தேவை, புதிய மைதானங்களை கட்டுவதற்கு பணத்தை செலவிடுவது அல்ல எனவும், பாடசாலை மாணவர்களின் கிரிக்கெட் திறமைகளை மேம்படுத்துவதற்காக தற்போது உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கு தேசிய திட்டமொன்றை செயல்படுத்துவதே என ரொஷான் மஹானாம சுட்டிக்காட்டியுள்ளார்.