காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் அமோக விற்பனை!
உலகம் முழுவதும் இன்று (February - 14) காதலர்கள் உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். காதலைர் தினத்தில் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிசிகளையும் வழங்கு கின்றனர்.
அந்தவகையில் காதலர் தினம் என்றாலே ரோஜா பூவிற்கே முதலிடம். உலகளவில் இன்று அதிகளவு விற்பனையாகும் ஒரே மலர் என்றால் அது சிவப்பு ரோஜா தான்.
இந்நிலையில் இலங்கையிலும் காதலர் தினத்தை முன்னிட்டு அதிகளவான ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவான ரோஜா பூக்கள் விற்பனை
காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களை இளையோர்கள் கொள்வனவு செய்வதாக கொழும்பில் உள்ள பூக்கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஒரு சிவப்பு ரோஜா பூவின் விலை 200 ரூபா என்றும், அலங்கரிக்கப்பட்ட சிவப்பு ரோஜா 250 ரூபாவாகும் விற்பனை செய்யப்படுகின்றது.
அதே நேரத்தில் சிவப்பு ரோஜாக்களின் பூச்செண்டிற்கு 8,000 முதல் 12,000 ரூபாய் வரை காதலர்கள் செலவிடுகின்றனர்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோஜா
அதேவேளை நுவரெலியா உள்ளூர் ரோஜாவின் அதிகபட்ச விலை 400 ரூபா என்றும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோஜா 300 ரூபாய் என பூக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் கலப்பு பூக்கள் கொண்ட பூங்கொத்தின் குறைந்தபட்ச விலை 2,000 மற்றும் அதிகபட்ச விலை 4,500 ரூபாவாகும். மேலும் ஒரு சாதாரண பூங்கொத்தின் சராசரி விலை 2,833 ரூபாய் என்று பூக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.