வீதி தகராறில் பெண்ணின் காதை கடித்த அண்டை வீட்டார்
நுவரெலியா, சீதா எலியா போலகந்த பகுதியில் ஏற்பட்ட வீதி தகராறில், ஒரு பெண் மற்றொரு பெண்ணின் காதை கடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
கடந்த ஆண்டு 8ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு வார காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலின்படி, சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் நிலத்தில் அமைந்திருந்த தற்காலிக பாதையை பொதுச் சாலையாக பயன்படுத்த அனுமதிக்குமாறு சில அண்டை வீட்டார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் நில உரிமையாளர் பெண்ணுக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் பின்னர் தகராறாக மாறிய நிலையில், அண்டை வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் இடது காதை கடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.