ஒவ்வொரு வீட்டிலும் கோவிட் நோயாளர்கள் உருவாகும் அபாயம்; மக்களுக்கு வந்த எச்சரிக்கை
எதிர்வரும் நாட்களில் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள வீடுகளிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படக்கூய அபாயகட்டம் நெருங்கி வருவதாக அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா சுகாதார வழிகாட்டல்கள் அரசாங்கத்தினால் திருத்தியமைக்கப்பட்ட நிலையில், இன்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் அறிக்கை பிரயோசனமற்றதாகும் என்றும் அந்த சங்கத்தின் தலைவரான டாக்டர் நிஷாந்த தஸநாயக்க கூறினார்.
ஊடகமொன்றுக்கு இன்று முற்பகல் கருத்து வெளியிட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தடுப்பூசியேற்றல் பணிகள் இந்த நாட்டிற்குள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டதாகவும், முறையான மற்றும் தகுதியான ரீதியில் அப்பணிகள் இடம்பெறுவதில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.