வயதை திருத்தியமைத்து வர்த்தமானி!
வைத்தியர்களின் ஓய்வு வயதை திருத்தியமைத்து அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
கட்டாய ஓய்வு வயது திருத்தம்
அதன்படி, விசேட வைத்திய அதிகாரி, அரசு வைத்திய அதிகாரி, பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அரசுப் பதிவு வைத்திய அதிகாரி ஆகிய பதவிகளின் கட்டாய ஓய்வு வயது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அந்த சட்டத்திருத்தத்தின்படி ஏற்கனவே 63 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்கள் டிசம்பர் 31ம் திகதிக்கு முன் ஓய்வு பெற வேண்டும்.
62 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 63 வயது நிறைவடைந்ததும், 61 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 62 வயது பூர்த்தியடைந்ததும் ஓய்வு பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 60 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 61 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும், 59 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும் புதிய திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று வயது மகன் மீது விழுந்த தந்தை ; இறுதியில் வீட்டிற்குள் நடந்த அசம்பாவிதம் ; பறிபோன பிஞ்சு உயிர்
சுவிஸிலிருந்து நீண்ட காலத்தின் யாழ் வந்தவருக்கு நடத்தப்பட்ட கொடூரத்தால் பரபரப்பு ; பணத்துக்காக இப்படியா?