திருத்தப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு ; அமைச்சரவை அங்கீகாரம்
திருத்தப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு உத்தேச முறையை நாடாளுமன்றில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறையின் கீழ் தற்போது செலுத்தப்பட்டு வரும் நலன்புரி நன்மைகளின் பெறுமதியை அதிகரித்து குறித்த உத்தேச முறையை திருத்தம் செய்வதற்காக மார்ச் 17 இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
அதற்கிணங்க, திருத்தப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு உத்தேச திட்டம் 2429ஃ02 ஆம் இலக்க மற்றும் 2025.03.24 திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த திருத்தப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு உத்தேச முறையை நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.