வரி ஏய்ப்பை தடுக்க புதிய அதிரடி ; QR குறியீட்டுடன் களமிறங்கிய இறைவரித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வரி செலுத்துவதற்குத் தகுதியான நபர்களையும் வணிகங்களையும் கண்டறியும் நோக்கில் விசேட வீதி ஆய்வொன்றை (Street Survey) ஆரம்பித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் நேற்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டன. இதன்படி கொழும்பு 1 முதல் 15 வரையிலான அனைத்துப் பகுதிகளிலும் இந்த ஆய்வு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் திணைக்களத்தின் விசேட குழுவினருடன் இராஜாங்க அமைச்சர் நிஷாந்த ஜயவீரவும் நேரடியாகப் கலந்துகொண்டார்.
இறைவரித் திணைக்கள அதிகாரிகள் கொழும்பிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேரில் சென்று, வரி வசூலுக்கு உதவும் வகையில் QR குறியீடு (QR Code) அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் வரி செலுத்தும் நடைமுறைகளை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.