ஓய்வுப் பெற்ற வைத்தியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த நடவடிக்கை
நாட்டின் பொருளாதார நெருக்கடிக் காரணமாக வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டுச் சென்றுள்ளதனால் இலங்கையில் வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவியுள்ளது.
இதன் காரணமாக சுகாதாரத் துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. சுகாதாரத் துறையின் தேவைகளை கருத்திற் கொண்டு ஓய்வு பெற்ற விசேட வைத்திய நிபுணர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதாரத் துறையில் கிட்டத்தட்ட ஐந்நூறு விசேட வைத்தியர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாகன.
அவ் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
கொழும்பிற்கு வெளியே உள்ள தூரப் பிரதேசங்களில் விசேட வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் அதிகம் காணப்படுவதாகவும் ஓய்வுபெற்ற விசேட வைத்திய நிபுணர்கள் பணிக்கு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு சகல வசதிகளையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.