மஹிந்த - கோட்டாபயவிற்கு கனடா அரசாங்கம் விதித்துள்ள அதிரடித் தடைகள்!
2009ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளதாக இன்று வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி அறிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இவர்கள் மீது கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.
மேலும் அதே காலகட்டத்தில், ராஜபக்ச சகோதரர்களுக்கு மேலதிகமாக, இன்று விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் இலங்கை இராணுவப் படைப் பிரிவின் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
As part of a historic decision, Minister @melaniejoly, has announced that ?? has imposed sanctions on the Rajapaksa brothers, along with two other state officials for their involvement in gross human rights violations in #SriLanka.
— Gary Anandasangaree (@gary_srp) January 10, 2023
? Full announcement: https://t.co/vlQlkLPELU https://t.co/Yzo9B8tvty pic.twitter.com/Efr03drmT3
இந்த நான்கு இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கனடா அரசாங்கம் விதித்துள்ள தடைகள், இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அடுத்த படியாகும்.





