பரிஸில் மீண்டும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு: எதற்கு தெரியுமா?
பரிஸில் உள்ள உணவங்கங்களின் முற்றங்களில் போடப்படும் இருக்கைகள் மீது கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (01) முதல் நடமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலை காரணமாக பரிஸில் உள்ள உணவங்களில் உள்ளக இருக்கைகளுக்கு பதிலாக, வெளிப்புறம் (terraces) இல் அதிக இருக்கைகள் போட அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கை இடைக்கால திட்டமாக ‘இவ்வருடத்தின் ஏப்ரல் 1 ஆம் திகதியில் முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை’ அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நவம்பர் 1 ஆம் திகதியில் இருந்து மீண்டும் முன்னர் இருந்தவாறு மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகளுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்படும் என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பரிஸில் உணவக, அருந்தகங்களின் முற்றங்களின் அளவுக்கு ஏற்ற படியே இருக்கைகளை அமைக்க முடியும், இந்த சட்டத்தினை உரிமையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.