பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
மறைத்து வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசில்களை வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
வழங்கப்படவுள்ள பணப் பரிசில் தொகை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒழிப்பதற்கு விசேட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செயலாளரின் கருத்து
ஆயுதமேந்திய படையினர் மற்றும் பொலிஸ் விசேட வாகனங்களையும் இதற்கு பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வௌிநாடுகளுக்கு சென்றுள்ள பாதாள உலகக் குழுவினரால் இவ்வாறான குற்றச்செயல்கள் வழிநடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அண்மை நாட்களில் நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும்அவர் மேலும் தெரிவித்தார்.