அமைச்சர்கள் பதவி விலகியது செல்லாது என தகவல்
அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய அமைச்சர்களின் பதவி விலகலை ஜனாதிபதி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவர்கள் தொடர்ந்தும் அமைச்சு பதவிகளில் செயற்படுவார்கள் என தெரியவருகிறது.
அத்துடன் ஜனாதிபதி தற்போது எங்கு இருக்கின்றார் என்ற தகவலும் தெரியவில்லை.
மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, மகிந்த அமரவீர மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் தாம் வகித்து வந்த அமைச்சு பதவிகளில் இருந்து விலகும் கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
எனினும் இந்த பதவி விலகல்களை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியிடம் இருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனால், இவர்களில் பதவி விலகல் செல்லாது எனக்கூறப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.