பதவிவிலக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்திற்கு பதிலடி கொடுத்த சுசில் பிரேமஜயந்த!
நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி விலகல் தொடர்பில் கவலையடையவில்லை என்றும், இனி என் தொழிலை செய்வேன் என பதவி விலக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கூறுகையில்,
பதவி விலகல் பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்ல. ஊடகங்கள் ஊடாகவே அறிந்தேன். நான் 2000 ஆம் ஆண்டு அமைச்சு பதவியை வகித்தேன்.
அதோடு மூன்று ஜனாதிபதிகளின்கீழ் வேலை செய்துள்ளேன். நான் சட்டத்தரணி, இனி அந்த தொழிலை முன்னெடுப்பேன். தகுதியானவர்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். தகைமையற்றவர்களுக்கு கல்வியின் பெறுமதி தெரியாது என சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
சுசில் பிரேமஜயந்த அண்மைய காலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார். அத்துடன் நாட்டின் பிரச்சினைகள் தீர்க்க முடியாத அளவுக்கு புரையோடி போயுள்ளதாகவும் வேறு ஒரு அணியிடம் நாட்டை ஒப்படைத்தாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் சுசில் பிரேமஜயந்த கூறியிருந்த நிலையில் அவர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சுசில் பிரேமஜயந்த வகித்து வந்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு பதவி எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்