சிறுவர்களிற்கு உடனடியாக தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை!
இலங்கையில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 180 சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் 105 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டனர் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் தீவிர கிசிச்சை பிரிவில் எவரும் இல்லை என கூறப்படுகின்றது.
அதேவேளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் மருத்துவமனையில் 35 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கராப்பிட்டிய மருத்துவமனையில் ஏழு சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டதில் ஒரு மரணம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் ,அனுராதபுர போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது தீவிர கிசிச்சை பிரிவில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ராகம மருத்துவமனையில் 30 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 20 முதல் 30வயதினருக்கு பைசர் தடுப்பூசியை வழங்கி அதனை வீணடிக்காமல் 12 முதல் 18 வயதினருக்கு வழங்குமாறு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிற்கு பைசர் தடுப்பூசியை மாத்திரம் வழங்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.