முன்னாள் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை
மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து போன முன்னாள் ஆயுதக் குழுக்களையும் அகில இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கட்சியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது.
இந்தக் கட்சிகள் பெரும்பாலும் இருக்கை பங்கீட்டில் எழுந்த சிக்கல் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து அகில இலங்கை தொழிலாளர் காங்ரஸ் 2010 இல் வெளியேறி தமிழ்த் மக்கள் தேசிய முன்னணியைத் தோற்றுவித்தது.
அடுத்து சுரேஸ் பிறேமச்சந்திரன் தனக்குத் தேசியப் பட்டியல் மூலம் நா.உ பதவி தரவில்லை என்ற கோபத்தில் இபிஆர்எல்எவ் 2015 இல் வெளியேறியது. ரெலோ, பொளட் தங்களுக்கு சுழற்சி முறையில் தலைவர் பதவி வழங்க வேண்டும்.
ததேகூ ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னை பிரதான கட்சி எனக் கூறிக் கொண்டு 2023 சனவரியில் வெளியேறியது. ஒரு கட்சியில் இருப்பவர்கள் ஒத்த கொள்கை, கோட்பாட்டில் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உட்பூசல்கள் தலைதூக்கும்.
எனவே மீண்டும் ததேகூ என்பது அசாத்தியம். ஆனால் தேர்தல் கால்தில் இருக்கைகளை பிரித்துக் கொள்ளலாம். அதற்கு நல்ல எடுத்துக் காட்டு திருகோணமலை தேர்தல் மாவட்டம். இதஅக, பொளட், ரெலோ ஒரே அணியாக தேர்தலில் போட்டியிட்டதால் திருகோணமலையில் ஒரு இருக்கையைத் தக்க வைக்க முடிந்தது.
இன்று யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் குண்டுச் சட்டிக்குள் ஓடிய பொளட் கட்சி காணாமல் போய்விட்டது. அது போலவே இபிஎல்ஆர்எவ் மற்றும் ரெலோ கட்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
இதஅக ஒன்றாகப் போட்டியிடுவோம் என்று கேட்ட போது, நாங்கள் போக மாட்டோம் விரும்பினார் இதஅக எங்களோடு வந்து சேரலாம் என வீம்பு பேசினார்கள். நடந்து முடிந்த தேர்தலில் கட்டுக்காசை சனநாயக ததேகூ இழந்துள்ளது.
அதைவிட அவமானம் ஊசிக்கு இந்த சததேகூ க்கு விழுந்த வாக்குகளை விட அதிக வாக்குகள் விழுந்துள்ளன. ததேமமு என்ற முகமூடியை அணிந்து கொண்டு வரலாற்றுக் கறைபடிந்த கைகளோடு தேர்தலில் போட்டியிட்ட அஇதகா தனது வாக்குப் பலத்தை 55,303 இல் இருந்து 27,986 (8.6) ஆக சுருக்கிக் கொண்டது.
வாயளவில் தமிழ்த் தேசியம் பேசும் இந்தக் கட்சிகள் இதஅக யோடு ஒரு தேர்தல் உடன்பாட்டுக்கு வந்திருந்தால் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் குறைந்தது 4 இருக்கைகளைக் கைப்பற்றி இருக்கலாம்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றாகக் கேட்டிருந்தால் முடிவுகள் கீழ்க்கண்டவாறு இருந்திருக்கும். தேசிய மக்கள் சக்திக்கு விழுந்த வாக்குகளை விட இருமடங்கு வாக்குகள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு விழுந்துள்ளது.