இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் விடுத்த கோரிக்கை
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் விடுத்துள்ள கோரிக்கை.
எந்த விதமான எழுத்து மூலமான ஆவணங்களின்றி பாடசாலையின் திறப்புகளை அதிபர்கள் வேண்டாமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
ஆரம்பப் பாடசாலைகளை இலங்கை முழுவதுமாக தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்த நிலையில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு சம்பள முரண்பாட்டை பிரச்னையை தீர்க்கப்படாத காரணத்தினாலே தொடர்ச்சியாக இன்றும் நாளையும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவித்தோம். மேலும் எதிர் வரும் 25ம் திகதி முதல் கற்பித்தலை தொடங்குவோம் என தெரிவித்தார்.
25ஆம் திகதி முதல் நாங்கள் தொடர்ந்து கற்றல் கற்பித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் நாங்கள் வியூகங்களையும் தொழிற்சங்க போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்வோம்.
மேலும் எந்த வித எழுத்து மூல ஆவணங்களின்றி உங்கள் பாடசாலையின் தீர்ப்புகளை கையளிக்க வேண்டாம். பாடசாலையின் பொறுப்பை ஒப்படைப்பது தொடர்பில் பல சுற்று நிருபங்கள் தெளிவாக விளக்குகின்றன.
பாடசாலை பொறுப்பை ஒப்படைப்பது ஒழுங்குவிதிகள் சட்ட நடைமுறைகள் உள்ளன. சட்டவிரோதமாக பறிமுதல் செய்தால் நீங்கள் எமக்கு முறைப்பாடு செய்யுங்கள். இதற்காக அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை முன்கொண்டு செல்வதற்கு முனைப்பாக இருப்போம். பாடசாலைகளின் முகாமைத்துவத்தை பார்வையிடவும் மேற்பார்வையிடுவதற்குமான ஆற்றல் கல்வி அமைச்சுக்கே உண்டு.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.