பொதுமக்களிடம் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை!
போராட்டத்தின் போது அடிப்படை உரிமைகளை அனுபவித்து, அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கும், சேவையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அதேநேரம், உத்தியோகபூர்வ கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் பிரிவு சேவையாளர்களுக்கு இடையூறு விளைவிக்காது சட்டத்திற்கு உட்பட்டு அடிப்படை உரிமைகளை அனுபவிக்குமாறும் கோரியுள்ளார்.
மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் அரச மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், பொலிஸ் உத்தியோகத்தர்களால் பொறுமை காக்க முடியாது எனவும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.