தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா !
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.
ரேணுகா ஏக்கநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் மனைவி ஆவார்.
அவரது இராஜினாமா கடிதம் அரசியலமைப்பு சபைக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க சமன் ஏகநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் திருமதி ரேணுகா ஏக்கநாயக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பதவியும் வெற்றிடமாகியுள்ளது.
அதன்படி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போது இரு உயர் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
