பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்
பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் தனது 75ஆவது வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
3000 பாடல்களுக்கு மேல் பாடிய பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் உயிரிழந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மண்ணெடுத்து, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் உள்ளிட்ட பாடல்களை பாடிய பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்.

அவருக்கு வயது 74. உடல்நலக்குறைவால் அவர் மரணமடைந்த தகவல் சினிமா இசை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவா இசையில் அதிக பாடல்கள் பாடியவர் கிருஷ்ணராஜ். குறிப்பாக விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி, தஞ்சாவூர் மண்ணெடுத்து, வெள்ளரிக்கா உள்ளிட்ட பாடல்களை தேவா இசையில் பாடியவர் கிருஷ்ணராஜ். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு படங்களில் பாடியுள்ள கிருஷ்ணராஜ், இளையராஜா உடன் சில படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
எனினும், தேவா உடன் அதிகமான படங்களில் பணியாற்றியிருக்கிறார். தேவாவின் மெகா ஹிட் பாடல்கள் பலவும் கிருஷ்ணராஜ் பாடியதே. அந்த அளவுக்கு தேவாவின் ஆஸ்தான பாடகராக இருந்தார்.