சுரேஷ் சலேயின் ரிட் மனு ; பிக்குகள் குழுவின் இடைக்கால மனுக்களை நிராகரித்த நீதிமன்றம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைச் சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவில் இடையீட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினரால் குறித்த இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த மனுக்களை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சுரேஷ் சலே தாம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.