மீகொடவில் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு விளக்கமறியல்
மீகொட சந்தைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அன்னதான வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கார் மோதி, 06 பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சொகுசு கார் உரிமையாளர் உட்பட இருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் ரொஷான் குருப்புஆராச்சி இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள், விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளரான அத்தநாயக்ககே தொன் வசந்த மற்றும் எஸ்.கே. குமார எனப்படும் செல்லமுத்து செல்லக்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் சட்டத்தரணி ஒருவருடன் மீகொட பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து சரணடைந்த நிலையிலேயே, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பதில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.