வெளியான ஆர்யன்கான் வாட்ஸ் அப் சாட்....வலுப்பெற்ற சிக்கல்
ஆர்யன்கானின் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை மும்பை உயர் நீதிமாற்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆர்யன்கான் மற்றும் அனன்யா பாண்டேவுடன் உரையாடிய வாட்ஸ் அப் சேட் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த உரையாடலானது கடண்ட் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. இருவரும் அதில் போதைப்பொருள் பற்றியே பேசியுள்ளனர். இந்த சேட்டால் ஷாருகான் மகன் மீதான வழக்கு வலுப்பெற்றுள்ளது.
2018-19 காலக்கட்டத்தில் நடிகர் அனன்யா பாண்டேவுடன் ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்பான மொபைல் உரையாடலில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் அதில் இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் விசாரணையில் அவர் தான் எந்த போதைப்பொருளை எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். முன்னதாக சொகுசுக்கப்பலில் அதிரடி சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன்கானை கைது செய்தனர்.
