தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த அஞ்சல் ஓட்ட சாம்பியன் அணி
தாய்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஆசிய ரிலே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி நேற்று (2024.05.22) இரவு நாடு திரும்பியது.
இந்த போட்டி தாய்லாந்தின் பாங்காக்கில் கடந்த 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதில் 400 x 4 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கலிங்க குமார, அருண தர்ஷன பசிது கொடிகார மற்றும் தினுக தேஷான் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றனர்.
மேலும், 400 x 4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன், பசிது கொடிகார, சயுரி மென்ட்ஸ் மற்றும் நதிஷா ராமநாயக்க ஆகியோர் அந்த நிகழ்வில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
மேலும், இந்தப் போட்டியில் இலங்கையின் 100m x 4m ஆண்கள் அணியும் 100m x 4m பெண்கள் அணியும் நான்காவது இடத்தைப் பெற்றிருந்தன.