இது சொர்க்கம் அல்ல ...அதுக்கும் மேல ; கருங்கோழி வளர்ப்பில் அசத்தும் Reecha Organic Farm!
சொர்க்கம் என்றால் பலரும் பல இடங்களை கூறினாலும் நாம் பிறந்த இடமும் மண்ணும் என்றுமே மகிழ்ச்சியை கொடுப்பதுதான். ஏனெனில் எங்களுடை ஞாபகங்கள் பலவற்றை சேகரித்து தருவதுதான் நாம் பிறந்து வளர்ந்து ஓடிவிளையாடிய காலங்கள்.
அதனால் தான் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் புலம் பெயர் உறவுகள் நம் தேசத்தை தேடி ஓடி வருகின்றனர். அப்படி வருகின்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எமது மண்ணின் கடமையல்லாவா....
அந்த வகையில் நாட்டுக்கு வரும் எம்மவர்களை பெரிது கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதுதான் Reecha Organic Farm.
கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள Reecha Organic Farm இல் பல்வேறு பறவைகள் மற்றும் மிருகங்கள் என்பன வளர்க்கப்படுகின்றன.
உணவு, நீச்சல் தடாகம் என்பவற்றுடன் நீங்கள் தங்கி நின்று இயற்கையை ரசிக்கும் அளவுக்கு Reecha Organic Farm உள்ளது.
அந்தவகையில் கருங்கோழி வளர்ப்பிலும் அசத்தி வருகின்றது.
கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி, கருங்கால் கோழி, கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
அவ்வாறு வளர்க்கப்படும் கருங்கோழிகளின் நன்மைகள் என்னென்ன என பார்க்கலாம்,
நோய் எதிர்ப்பு சக்தி மிக்க இறைச்சி
நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, "கடக்நாத்' என்றழைக்கப்படும் கோழியினமாகும் கருங்கோழி. இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது.
கருங்கோழி ஆண்டிற்கு 120 முதல் 150 முட்டைகளை இடுவதால் இதனுடைய விலையும் சற்று அதிகமாக இருக்கும். எல்லாம் நாட்டுக்கோழி போலவே இதிலும் நல்ல கொழுப்புச்சத்து மற்றும் புரதம் உள்ளது.
இவ்வாறான பல சத்துக்களை உள்ளடகிய கோழிகளை வீட்டில் வளப்பவர்கள் குறைவு. அந்த அதிசய கோழிகளை Reecha Organic Farm இல் நீங்கள் கண்டு களிக்கலாம்.
இதற்குள் ஒரு சிறிய இலங்கை இருக்கு
வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும் ஒரு Farm House
இந்த Farm House-ல் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்
இது இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்