Reecha நிறுவுனர் இப்படிப்பட்டவரா? நபர் ஒருவரின் ஆதங்கம்!
Reecha organic farm ஈழத்தமிழர் பகுதியில் நாம் பெருமிதம் கொள்ளக்கூடிய பிரமிப்பை ஏற்படுத்தும் சுற்றுலா தலம் ஆகும். புலம்பெயர் தமிழ் தொழி அதிபரின் கடும் உழைப்பினால் எமக்கென ஓர் அடையாத்தை கொண்டதாக Reecha அமைந்துள்ளது.
உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் எம் உறவுகளும் Reecha சென்று பொழுதை கழிப்பதில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது அங்கு 500 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் அங்கு வேலை செய்து வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் Reecha organic farm வழிவகுத்துள்ளது.
பிரமிப்பை ஏற்படுத்தும் சுற்றுலா தலம்
இந்நிலையில் கடந்த சில தினங்களின் முன்பு Reecha organic farm தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியான கா்ணொளி ஒன்று பெரும் சர்ச்சையை தோற்று வித்திருந்தது.
தனி நபர் ஒருவரால் வெளியிடப்பட்டிருந்த அக்காணொளிக்கு பல்வேறு விமர்சனங்களும் , Reecha organic farm இற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்திருந்ததனர்.
உள நாட்டில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களிலும் மாபெரும் விருட்சமாய் இன்று உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ள Reecha organic farm இற்கு திட்டமிட்டு சில விசமிகளால் அவதூறுகள் பரபப்படுகின்றமை வேதனையை ஏற்படுத்துவதாக அங்கு சென்று வந்தவர்கள் காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் எம்மவர் பகுதியில் தென்னிலங்கையில் இல்லாத அளவு மிகப்பெரும் , தனி மனிதரின் முயற்சியால் உருவான Reecha organic farm தமிழர் தாயகத்தில் அமைந்துள்ளமைக்கு தமிழர்களாகிய நாம் பெருமிதம் கொள்வேண்டுமே தவிர அதனை காழ்ப்புணர்சியை வெளியிடக்கூடாது பலரின் கோரிக்கையாக உள்ளது.