இவ்வளவா....81 ஆயிரம் கோடிக்கு தங்கம் வாங்கிய இந்தியர்கள்!
2026 காலாண்டில் ரூ.81,890 கோடிக்கு இந்தியாவில் தங்கம் விற்பனையாகியிருக்கிறது. உலக அளவில் 80 டன் தங்கம் வாங்கிய சீனா முதலிடத்தில் இருக்கும் நிலையில் 55 டன் வாங்கிய இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார மதிப்பு என்பது அந்த நாட்டிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதை வைத்துதான் கணக்கிடுகிறார்கள்.
அதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பையே தங்கத்தை வைத்துதான் மதிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட தங்கத்தின் விலை இந்தியாவில் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது
50,000, 60,000 விற்று வந்த தங்கம் சில மாதங்களுக்கு முன்பு குறைவான நாட்களிலேயே ஒரு லட்சத்தை தொட்டது. ஆனாலும் தங்கத்தை வாங்குவதில் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என காட்டியிருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் காலண்டில் தங்கத்தின் தேவை 40 சதவீதம் சரிந்தாலும் இந்திய மக்கள் அதிக அளவு தங்கம் வாங்கி குவித்திருக்கிறார்கள்.