சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டவர்களுக்கு துண்டிப்பு!
சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட நுகர்வோருக் கான நீர் விநியோகத்தை துண்டிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் நீர் வெட்டுகள் மேற்கொள்ளப்படும் என அதன் பொது முகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க நேற்று தெரிவித்தார்.
நீர் பாவனையாளர் 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க சட்டத்தின்படி தண்ணீர் பில் வழங்கப் பட்ட 30 நாட்களுக்குள் தங்கள் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். அத்துடன் சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்ட 48 மணி நேரத்துக்குள் பில்கள் செலுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு நீர் வெட்டு தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகி 14 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தத் தவறிய நுகர்வோருக்கு மாவட்ட அளவில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என உதவிப் பொது மேலாளர் கூறினார்.
ஜனவரி மாதத்தில் நுகர்வோர் செலுத்தத் தவறிய தொகை சுமார் 7200 மில்லியன் ரூபாவாக இருந்ததாகவும் தற்போது அது 6000 மில்லியன் ரூபாவாகும் எனவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
அதன்படி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பின்னர் மீண்டும் இணைக்க வீட்டு வாடிக்கையாளர் களுக்கு 1080 ரூபாவும் மற்றும் பொது/தனியார்/ வழிபாட்டுத் தலங்கள் / வணிக நிறுவனங்க ளுக்கு 3240 ரூபாவும் வசூலிக்கப்படும் என்றார்.
மேலும் சுமார் 1.5 மில்லியன் நுகர்வோர் பல மாதங்களாக நீர் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட் டுள்ளதால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.