விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை ; மக்களே அவதானம்
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (26) மாலை 4 மணியளவில் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை
அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரள, நோர்வூட் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, எலபாத, அயகம, ஓபநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் தொடங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.