கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
ஆழ்க்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு இன்று இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் அரபிக் கடலின் வழியாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறதுது.
இதன் காரணமாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை வழியாக திருகோணமலை கடற்பகுதிகளுக்கு அடுத்த 24 மணித்தியாலத்துக்கு எவரும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.