கிழக்கு ஆளுனருக்கு எதிராக மட்டக்களப்பில் பெரும் சதி! நடக்கப்போவது என்ன....
அடாவடிச் செயல்களை அதிரடியாகச் செய்யக்கூடியவர்தான் பட்டிருப்பு கல்வி அதிகாரி.
பட்டிருப்பில் குறித்த அதிகாரிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குழப்பங்களை அடுத்து, அங்கிருந்து அவரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் வீடொன்றில் இரவு நேரக் கூட்டம்
அந்த வகையில், அதற்கான கடிதம் மாகாணத் திணைக்களத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தை உதாசீனம் செய்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு குறித்த அதிகாரி ஆயத்தமாகியுள்ளார்.
தற்போது சிக்கலில் சிக்கிய கல்வி அதிகாரி, மட்டக்களப்பு படுவான்கரை வலயத்தில் இருந்து ஒரு கும்பலை களுதாவளைக்கு அழைத்து இரவு நேரக்கூட்டம் ஒன்றினை 10/04/2024 அன்று தனியார் வீடொன்றில் நடாத்தியுள்ளார். அவர்களுக்கு விருந்தும் அளித்துள்ளார்.
அதன்படி கிழக்கு மாநகர ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கான கலந்துரையாடல் நடைபெற்றதாகத் தகவல் கசிந்துள்ளது.
குறித்த அதிகாரியுடன் பல குழறுபடிகள் செய்வதற்கு பக்கபலமாக இருந்து சலுகைகள் பதவி உயர்வுகள் பெற்ற முரு...சு, கா...தன் தலைமையில் இக்கும்பல் படுவான்கரை வலயத்தில் இருந்து வருகை தந்து, அதிகாரியை பாதுகாப்பதற்கான ஆலோசனைகளைக் கூறியுள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஆளுனர், அதிகாரிகளை எப்படி அணுகுவது என்றெல்லாம் பேசியதாகக் கூறப்படுகிறது.
பிள்ளையான், வியாழேந்திரனிடம் தன்னால் பேச முடியும் என்று வந்தவர்கள் கூறியுள்ளார்கள்.
அதேவேளை, வியாழேந்திரனைப் பிடித்தால் ஆளுனர சமாளிக்கலாம் என்று ஆசாமி பட்டிருப்பு கல்வி அதிகாரி ஆலோசனை கூறியுள்ளார், அதனை வந்த கும்பல் செய்வதாகக் கூறியுள்ளது.
நான்கு நாள் சமாளித்தால் நீதிமன்றத்திடம் எதிர்வரும் செவ்வாய்கிழமை Stay order பெற்று விடுவேன் என்று குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
சர்ச்சை அதிகாரியைப் பொறுத்தவரை அரசியல்வாதிகள், நீதிமன்றம், பொலிஸ் என்று அலைவதுதான் அவரது பதவியைக் காப்பதற்கான பொறிமுறையாகும்.
ஆனால் அவர் இறுதியில் வென்றதாக வரலாறு இல்லை. இம்முறையும் சிறீ மூக்குடைந்துதான் வெளியேறுவார் என்பது பட்டிருப்பு வலய அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.
ஆனால், குறித்த கல்வி அதிகாரிகளை எதிர்ப்பவர்களின் சுயவிபரக்கோவைகளில் பல கோப்புக்களை அகற்றும் நடவடிக்கை இராப்பகலாக இடம் பெறுகின்றமை பல ஆசிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழிவாங்குதல், ஊழல், மோசடி, அதிகார வெறி, காக்காபிடித்தல் என்பவற்றில் வல்லவன். எனவே, குறித்த அதிகாரி வலயத்தில் இருந்து வெளியேற்றுவதுடன் நிற்காமல், எந்த வலயத்திற்கும் அனுப்பாமல் இருக்க வேண்டியதும் அவசியமாகும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் வேண்டுகோள் வைக்கின்றனர்.
மோசடியால் SLEAS நியமனம் பெற்ற குறித்த அதிகாரி மோசடி, முறை கேடான நிருவாகத்தில் கைதேர்ந்தவர். என்பதனை ஆளுநர், அதிகாரிகள் உணர்ந்தே தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த அதிகாரியை இதுவரை பாதுகாத்வர்கள் முன்னாள் ஆளுனர்களான அனுராதா, கிஸ்புல்லா மற்றும் கல்விச்செயலாளர்களான முத்துபண்டா, பெர்னாண்டோ, திசாநாயக்க போன்றவர்களாவர்.
இவர்கள் தமிழர் கல்வியில் அக்கறையற்றவர்கள் ஆவர். மோசடிக்காரர் என அறிந்தும் குறித்த அதிகாரியை பட்டிருப்புக்குக் அழைத்து வந்தவர் வேறு யாருமல்ல இன்று வேண்டாம் என போராட்டம் நடத்ததும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தனிற்கு தெரியாது அவரின் தலைவர் பிள்ளையானால் நியமிக்கபப் பட்டவர் என இது தான் பெரும் அவலம்...
அவருக்கு PDE பதவியுயர்வுக்கு சிபார்சு செய்தவர் வியாழேந்திரன் ஆவார். மொட்டுக்கட்சிக்கும் மோசடிக்காரர்களுக்கும் உள்ள தொடர்பு இப்படித்தான் உள்ளது.
ஆளுநர் செந்தில் தொண்டமான் பட்டிருப்பு விடயத்தில் மிக நேர்மையாக செயற்பட்டு வருகின்றமை கல்விச் சமூகத்திற்கு பெரும் ஆறுதலாக இருந்தாலும், மட்டக்களப்பில் உள்ள இரு ஊழல் அரை அமைச்சர்களை நினைத்து மக்கள் அச்சப்படுகின்றனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் இதற்கான நீதியை விரைவாக வழங்கக் கூடியவர் என மக்கள் எதிர்பார்க்கின்றனர், அது விரைவாகக் கிடைத்தால் நல்லதாக அமையும் என பதிக்கப்பட்ட தரப்பு கோரிக்கை விடுக்கின்றனர்.