காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு
திருகோணமலை - நிலாவெளி கடற்கரை பகுதியில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக கரையொதுங்கியுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ - தம்பகஹவெல, பாட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.என்.நளின் பிரியந்த (வயது 21) என்பவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாக தெரிய வந்தது. நேற்று நிலவொளி கடற்கரையில் நீராடச் சென்ற தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் சிலரால் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் காணாமல் போனார்.
கடற்படையினரும் உப்புவெளி பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் குறித்த இளைஞர் மீட்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள்