பருத்தித்துறை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர்மடம் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகிலிருந்து இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வைரவ நாகரட்ணம் (78) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நபர் நேற்று இரவு அப்பகுதியில் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்ததாகவும், இந்நிலையில் இன்று காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த முதியவர் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர் என்றும், அவரின் மகன் கரவெட்டி பகுதியில் வாழ்ந்துவருவதாகவும் கூறப்படும் அதேவேளை, உயிரிழந்தவர், வழி தவறு சுப்பர்மடம் பகுதிக்கு சென்றிருக்காலம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மற்றும் பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் ள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.