மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆவணம்
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் சில நிலத்தில் புதைந்து காணப்பட்டதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
இந்தப் புத்தகங்கள் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ரசீதுகள், ஆவணங்கள் மற்றும் நிர்வாகத்திற்கு பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நில உரிமையாளர் கடலை சாகுபடிக்காக நிலத்தில் பயிர் செய்து கொண்டிருந்த போது இந்த ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து, காணி உரிமையாளர் எச்சிலம்பற்று பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.