பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு; மற்றுமொரு சந்தேகநபர் ரகசிய வாக்குமூலம் !
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் மற்றுமொரு சந்தேகநபர், நேற்று இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கினார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியரிடம் கைக்குண்டை வழங்கியதாக கூறப்படும் கொடித்துவக்கு ஆராச்சிகே ருவன்சிறி பிரேமச்சந்திர என்ற சந்தேக நபர் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இரகசிய வாக்குமூலத்தை வழங்கினார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மொத்தம் ஏழு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னதாக, அரச தரப்பு சாட்சியாக 13 வயது சிறுவன் ஒருவன் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலத்தை வாங்கியிருந்தான்.
மேலும், இச்சம்பவத் தொடர்பாக தற்போது பொலிஸ் காவலில் உள்ள 65 வயதுடைய சந்தேக நபரான லியனகே தயாசேன மற்றும் ஓய்வுபெற்ற வைத்தியர் ஷெர்லி தயானந்த ஹேரத் ஆகியோரும் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.