நாட்டை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க இது ஒன்றே வழி! அமைச்சர் பந்துல
இலங்கை வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். அதுவே நாட்டை கட்டி எழுப்ப கூடிய ஒரே வழியாகுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்று முக்கிய தினமாகும். அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) நாட்டில் சௌபாக்கியத்தை கருத்திற் கொண்டு பெரிய சாகுபடி முறையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.
அதற்காக சமல் ராஜபக்ஷ, (Chamal Rajapaksa) விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட போது, நாட்டை மூட வேண்டும் என்று கூறினார்கள். உலக நாடுகளில் இவ்வாறான செயற்பாடுகளால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. அத்துடன், ஓமான் போன்ற நாடுகளில் நம் நாட்டு மரவள்ளி கிழங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதாவது அங்கு 1கிலோ கிராம் மரவள்ளி கிழங்கின் விலை ரூ. 2000 வரையில் காணப்படுகிறது.
இருப்பினும், நமது அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து பெறுகின்றோம். சுதந்திரத்தின் பின்னரே வெளிநாடுகளில் இருந்து பல பொருட்களை பெற்றுள்ளோம். இது பழக்கப்பட்ட விடயமாக மாறிவிட்டது.
நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் குண்டு வெடிப்பு ஏற்பட்ட காரணத்தினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது, டொலர் பற்றாக்குறையால் பெறப்படும் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டிற்கு பாரிய முறையில் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஒரு நாடு வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.
அதே நாட்டை கட்டி எழுப்ப கூடிய ஒரே முறையாகும் என்றார்.