‘Rebuilding Sri Lanka’ ; புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்காக செய்த செயல்
'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நேற்று (02) வரை 19,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் பணத்தை வைப்புச் செய்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார்.

நிதி உதவி
நிதி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நமது நாட்டு மக்களில் பெரும்பாலோர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தலையிடுவது போன்று,வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்காக, நிதி அமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்பில் தற்போது இரண்டு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அதன் முதலாவது வேலைத்திட்டமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் நிதி உதவிக்காக இலங்கை வங்கியில் ஒரு சிறப்புக் கணக்கு இலக்கம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 19,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் அதில் பணத்தை வைப்புச் செய்துள்ளனர்.