பதவியை விட்டு விலகத் தயார் ; பிரதமர் ஹரிணி அமரசூரிய
தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் சிரமப்படத் தேவையில்லை என்றும், மக்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகி வீட்டிற்குச் செல்லத் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தாம் மக்களுக்கும் தமது மனசாட்சிக்கும் மட்டுமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனவும், இந்த நாட்டின் மக்கள் எப்போது பிரதமர் மாற வேண்டும் என்று தீர்மானிக்கிறார்களோ, அந்தத் தருணமே பதவியை விட்டு விலகத் தாம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எப்போது கொண்டு வரப்போகிறீர்கள்? அதற்காகவே நான் காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்ட அவர், திட்டமிட்டபடி அந்தப் பிரேரணை கொண்டு வரப்படுமா இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மேலோட்டமான விவாதங்களை நடத்தாமல், அது குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு ஆழமான விவாதங்களில் ஈடுபடுமாறு எதிர்க்கட்சிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.