விடுதலை கோரும் ரவிச்சந்திரன்
இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் விடுவிக்கப்பட்டமை போன்று ஆயுள் தண்டனை கைதியான ரவிச்சந்திரனும் விடுதலை செயப்படுவாரா என இந்திய நீதித்துறை தரப்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நீதித்துறை பின்னணியை வைத்து கொண்டு இந்த எதிர் பார்ப்பு நிலவுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு இந்தியா முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தொடர்பிலான ஆயுட் தண்டனை கைதி ரவிச்சந்திரன் சார்பில் இந்திய உயர் நீதிமன்றில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு ஆளுநரின் ஒப்புதல் இந்த விடுதலைக்கு இல்லையென்று கூறி அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பேரறிவாளனை உயர் நீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது அந்த சிறப்பு அதிகாரம் தமது நீதிமன்றுக்கு இல்லை என்று சென்னை மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வரும் வரை தமக்கு இடை கால பிணையை கோரியே ரவிச்சந்திரனின் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 ஆம் ஆண்டு தமிழகம் ஸ்ரீபெரம்பத்தூரில் வைத்து தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலை தொடர்பில் முருகன்,நளினி,ரவிச்சந்திரன் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இன்று வரை சுமார் 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் உள்ளநிலையில் பேரறிவாளன் மட்டுமே விடுதலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.