சிறையில் உண்ணாவிரதமிருந்த ரஞ்ஜன்
jail
ranjan
fasting
By Krishna
சிறையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க, அங்கு உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக வசதியான மலசலகூடத்தை அமைத்துத் தரும்படி சிறை அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
எனினும் அந்தக் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கமறுத்த நிலையில் அவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
இறுதியில் அவரது கோரிக்கையை கவனத்திற்கொண்ட அதிகாரிகள் அதனை நிறைவேற்றியதை அடுத்து போராட்டத்தை அவர் கைவிட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US